1. மகா இக்கட்டாம் ஆபத்து
உண்டாகி எங்கள் மனது
ஓர் யோசனையுமின்றியே
கலங்கிக் கொண்டிருக்கவே.
2. கர்த்தாவேமனத்தாழ்மையாய்
உம்மிடம் சேர்ந்து, ஏகமாய்
அனுக்ரகத்தைக் கேட்பதே
அடியார் ஆறுதலாமே.
3. நொறுங்கிய நெஞ்சுடனே
உம்மண்டை வந்தோம், கர்த்தரே
இரக்கமாக மன்னியும்,
சுருக்காய் தண்டியாதேயும்.
4. இக்கட்டில் இயேசு மூலமாய்
மன்றாடினோரைத் தயவாய்,
ரசிப்போம் என்று தேவரீர்
நல்வாக்குத்தத்தம்பண்ணினீர்
5. இப்போதும் இந்த ஆபத்தும்
விலகப்பண்ணிரட்சியும்
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறோம்,
அதேனெனில்திடுக்கிட்டோம்.
6. ஆ, எங்கள் மீறுதல்களைப்
பாராமல் இயேசுகிறிஸ்துவைப்
பார்த்தெங்கள் வாதை யாவையும்
அன்பாக நீக்கியருளும்.
7. பிற்பாடு நாங்கள் உமது
தயையைப் போற்றி, உமக்குப்
பயந்தோராக நித்தமும்
நடக்கக் கட்டளையிடும்.
Paul Eber, † 1569.