241. கர்த்தாவே, எங்கள் காலத்தில்

1. கர்த்தாவே, எங்கள் காலத்தில்
நீர் சமாதானந் தாரும்;
உம்மையல்லாமல் ஜெகத்தில்
போர் செய்யும் வேறு யாரும்
யங்களுக்காக இல்லை.

2. ஆ. நாங்கள் நீதிக்குக் கீழாய்
அமளியற்றமர
மெய்ப் பக்தியுஞ்செம்மையுமாய்
ஜீவனம் பண்ணி வர
ராஜாங்கத்தை ரட்சியும்.

3. ஆதியிலும் இம்மட்டுக்கும்
இருந்த விதமாக
பிதா குமாரன் ஆவிக்கும்
துதியுண்டாவதாக.
யேசுவே துணை, ஆமென்.

V. 1. Martin Luther, † 1546
V. 2. Johann Walter, † 1570.