1. அடியேனை உண்டாக்கின
பிதாவே, என்னை நீரே
ஆளாவிட்டால், நான் சகல
அசுத்தத்துக்குங் கீழே
அழுந்தி உயிருடனே
மரித்த பிரேதந்தானே;
அழுக்காம் பாவச் சேற்றிலே
புறள்பவன் வாழானே;
சாவவன்மேலே ஆளும்.
2. ஆ, உமதோழைப் பிள்ளைக்கு
இரங்கி என்னைக் காரும்,
அசுத்தத்தை என் மனது
வெறுக்கத் த்ராணி தாரும்;
என் பல வீனம் மிகுதி,
நீர் காக்கத் தேவையுண்டு,
இனி இடறலாம் மொழி
என் வாயிலே இருந்து
புறப்படாதே போக.
3. சுத்தாங்கமாக வேண்டிய
இதயத்தைக் கலக்கும்
பொல்லார் பேச்சுக்கென்னுடைய
செவிகளை விலக்கும்.
நான் துர்ச்சனரின் வம்புக்கு
விலகிப் போவேனாக.
செவி கொடுத்தால், தனது
அத்தாலே மோசமாகக்
கறைப்படுவதுண்டு.
4. வெட்காதிருக்கும் பார்வையை
நீரே என் கண்களுக்கு
விலக்கி நல்ல நாணத்தை
அடியேன் மனத்துக்குத்
தந்தெது மரியாதையோ,
ஏதேது தூதரான
நல்லாவிகளுக் கேற்குமோ,
அதென்னிடத்தில் காண
அனுக்ரகம் அளியும்.
5. வெறிக்கும் பெருந்தீனிக்கும்
நான் தூரமாவேனாக,
சிற்றின்பமல்ல, சுத்தமும்
பேரின்பமும் உண்டாக;
உம்மோடே சஞ்சரிக்கவே
அடியேனை எழுப்பும்,
துரிச்சை நரகத்துக்கே
நின்மூடனைத் திருப்பும்,
லௌகீக வாழ்வழியும்.
6. தன் ஆத்துமத்தைப் பரம
மன்னாவினாலே ஆற்றி
நல் மரியாதையுள்ளோனாய்
தன் தேகத்தைக் காப்பாற்றி,
மோட்சானந்தத்தில் என்றைக்கும்
பராபரனிடத்தில்
பிழைக்கவும் மகிழவும்
யாவையும் உலகத்தில்
வெறுத்தோனே பேறுள்ளோன்.
P. Gerhardt, † 1676