1. இம்மட்டும் தேவ கிருபை
அடியேனை ரட்சித்து,
இக்கட்டிலும் என் ஜீவனை
அன்பாய்ப் பராமரித்து,
மாதயவாய் நடத்திற்று.
இம்மட்டும் ஸ்வாமி எனக்குச்
சகாயஞ் செய்து வந்தார்.
2. என் ஜீவனுள்ள நாளெல்லாம்
நான் கண்ட உண்மைக்காக
கர்த்தாவுக்கென துன்மையாம்
துதியுண்டாவதாக;
அதிசய அன்புடனே
சகாயம் செய்தீர் என்பதே
என் மனமும் என் வாக்கும்.
3. இனியும் உமதுண்மையில்
சகாயம் செய்து வாரும்
என் இயேசுவின் காயங்களில்
முடிய என்னைக்காரும்
கிறிஸ்தின் இரத்தம் நீதியும்
எக்காலமும் எவ்விடமும்
என்னை ரட்சிக்க ஆமென்.
Aemilie Juliane, Countess of Schwarzburgh
Rudolstadt, † 1706