246. எனது ஆத்துமமே, விழி உட்கருத்தாக

1. எனது ஆத்துமமே, விழி உட்கருத்தாக
மகிமையுள்ள கர்த்தாவைப் புகழுவாயாக.
கீதங்களே,
என் சுரமண்டலமே.
போற்ற விழிப்பீர்களாக.

2. கர்த்தரைப் போற்று, வினோதமாய்
            [உன்னைச் சிஷ்டித்தார்;
மெத்த அதிசய மீட்பினால் உன்னை ரட்சித்தார்;
உன்னைத் தாமே
தமது கைகளிலே
ஏத்தி அனுக்கிரகித்தார்.

3. கர்த்தரைப் போற்று, அனைத்தையுஞ்
                [சீருக்கமைத்தார்
உன்னைக் காப்பாற்றிச் சுகத்தைத்
                [தந்தரவனைத்தார்;
மோசத்திலே:
செட்டைகளால் அவரே
உன்னை எப்போதும் மறைத்தார்.

4. கர்த்தரைப் போற்று, அன்பாய் உன்னை
                [ஆசீர்வதித்தார்,
நேச வாய்க்கால்களைப் பாய்ச்சி உன்மேல்
                [வரவிட்டார்;
கர்த்தரின் கை
வல்லது என்று நினை,
தயவாய் உன்னைச் சந்தித்தார்.

5. கர்த்தரைப் போற்று, என் உள்ளமே, ஜாக்ரதையாக,
சகல சிஷ்டியும் அவரைப் போற்றுவதாக.
ஆத்துமமே,
உன் உபகாரியையே
போற்ற மரந்திராயாக.

Joachim Neander, †1680