254. சர்வத்தையும் ஆளும் ராஜா

1. சர்வத்தையும் ஆளும்
ராஜா, நாங்கள் சொல்லும்
தோத்திரத்தை ஏற்றுக்கொள்ளும்
மருள விழுந்த
எங்களை ரட்சித்தீர்;
கேட்டை நீக்கி ஆதரித்தீர்;
எங்கள் வாய்
இனிதாய்த்
தேவரீரைப் பாடும்
சத்துவத்தைத் தாரும்.

2. வானமே, நீ மெத்த
பலமாய் அன்றன்று
கர்த்தரைப் ப்ரஸ்தாபம் பண்ணும்
சூரியன் நிலாவே
அவர் மேன்மைக்காக
ஒளி வீசுவீர்களாக
பரம
பூதல
சிஷ்டியே பெரிய
கர்த்தரைப் பணிய

3. என தாத்துமாவே,
கர்த்தரைக் கொண்டாடு
விசுவாசமாகப் பாடு;
ஜீவனுள்ள யாவும்
மா வணக்கமாக
அவரைத் துதிப்பதாக
நமது
ஸ்வாமிக்கு
இப்போதும் இனியும்
தோத்திரந்துதியும்.

4. நேசக் கர்த்தரான
இயேசுவைப் பணிந்து.
தெய்வத் தயவை அறிந்து
விசுவாசியானோன்
நித்தமாக
அல்லேலூயா என்பதாக;
அப்படிச்
செய்த நீ
அங்கேயுங்களிப்பாய்
கர்த்தரைத் துதிப்பாய்.

O.B. 181. N.B.201.
Joachim Neander, † 1680