1. வாழ சிலுவையே, வாழ
பாரமற்ற பாரமே
வரும் உன்னை மனமார
தோள்மேல் ஏற்றுக்கொள்வேனே.
2. இந்த நிந்தை லச்சையல்ல.
இது வெட்கம் அல்லவே;
ஏனெனில் பொல்லாப்புக்கல்ல
நீதிக்காக வருமே.
3. சத்தியத்தின் சாட்சிக்காக
வரும், இதற்காகவே
அந்தநாளில் ஸ்தேவான் சாகக்
கொண்டு போகப்பட்டானே.
4. உலகத்தின் பொழுதான
இயேசுவே தாமும் நிந்தைக்கே
ஏதுவாகி. ஈனமான
சிலுவையில் மாண்டாரே.
5. சிலுவையின் கீழ்த்தவிக்கும்
தம்முடையவர்களை
இப்போதவர் ஆதரிக்கும்
பட்சம் அன்பும் எத்தனை.
6. ரத்தச் சாட்சிகளெல்லாரும்
இயேசுவின் நிமித்தியம்
பாடுபட்டபின் கொண்டாடும்
பூரிப்பு மகா கனம்.
7. மிகுதியுந் துன்பப்பட்ட
இயேசுவின் அப்போஸ்தலர்
நீதிக்காய் வதைந்த மற்ற
யாவருங் கெலித்தவர்.
8. ஞானமற்ற மார்க்கத்தாரும்
ரத்தத்தால் வெறிக்கிற
பாபேல் மனிதர் எல்லாரும்
செய்த துஷ்டம் விருதா.
9. சூடு, குத்து முதலான
வாதைகள் ஏதேதுண்டோ,
அது இயேசு பக்தியான
நேசத்தை அவித்ததோ.
10. இல்லை, ஜீவன் போமட்டாகத்
திட மனத்துடனே
சத்தியத்துக்கு நன்றாகச்
சாட்சி கொடுத்தார்களே.
11. வாழ, சிலுவையே, வாழ
மோட்சத்தின் முன் தூதனே
நீதிமான்கள் இளைப்பாற
நேர் வழியாம் வாசலே
12. வா சன்மார்க்கராம் எல்லாரும்
எண்ணிய சிநேகிதா,
உன்னை என் இதயம் பாடும்
உன்னை விலகேன், நீ வா,
13. சிலுவையில் அறையுண்டோர்
இப்போதாண்டிருக்கிறார்
மெத்த நிந்தைப்பட்டிருந்தோர்
யாவுக்கும் மேல் ஏறினார்.
14. சாட்சிகளின் பேர் பரத்தில்
எழுதியிருக்குமே;
கிறிஸ்து நமக்கவ்விடத்தில்
வைத்த செல்வம் பெரிதே.
15. ஆகையாலே, வாதையாகச்
சாகுஞ் சாவையும் இப்போ
நாம் மன சந்தோஷமாக
உத்தரிக்க வேண்டாமோ.
16. நேசர் தயவாய் நம்மோடே
சொல்லும் ஒரு வார்த்தையே
துக்கத்தை எல்லாம் கட்டோடே
தள்ளி நீக்கிப்போடுமே.
17. அவரைப்பின் சொல்வோமாக
சிலுவையின் தோழரே;
அவரைப் புகழ்ச்சியாகத்
தோத்திரிப்போம், நோவிலே.
18. குத்தடி காயம் விலங்கே
நமக்கலங்காரமாம்.
சகல நிந்தையும் அங்கே
நமக்கு புகழ்ச்சியாம்.
19. லோகம் நம்மைப் பரிகாசம்
பண்ணிச் சங்கரிக்கவே,
கர்த்தராலே பிரகாசம்
ஆறுதலும் வருமே.
20. சாகும்போது, திறவுண்ட
வானத்தையும் அதிலே
மகிமையினால் சூழுண்ட
இயேசுவையுங் காண்போமே.
21. பாளையத்துக்கு வெளியே
நமதாண்டவரைப் போல்
அவர் மாதிரிப்படியே
நாமும் போவோம் வாருங்கள்.
L.A. Gotter, † 1735