1. உன்நெஞ்சிலே உண்டான
விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான
கரத்துக் கொப்புவி,
விண்மண்ணை ஆண்டிருக்கும்
நர தயாபரர்
உன் காரியங்களுக்கும்
வழியுண்டாக்குவார்.
2. ஜெயமடைந்து வாழ,
கர்த்தாவைப் பிள்ளைப்போல்
நீ நம்பி, மனமாரப்
பணிந்து பற்றிக்கொள்.
உன் கவலைகளாலே
உன் பயம் நீங்காது;
வேண்டாம், ஜெபத்தினாலே
நீ வேண்டிக்கொண்டிரு.
3. ஏழை அடியாருக்குப்
பிதாவாம் தேவரீர்
இன்னின்னதெங்களுக்கு
ஆகுமென்றறிவீர்;
நீர் எதை நல்லதாகக்
கண்டீரோ, அதை நீர்
மிகுந்த பலமாக
வர விடுகிறீர்.
4. பல வழி வகையும்
உம்மாலே ஏற்படும்
நீர் செய்வது இசையும்,
நீர் வாக்குத்தத்தமாக
மொழிந்தவை எல்லாம்
உம்மாலே திட்டமாக
நற்காலத்தில் உண்டாகும்
5. பேய்க்கூட்டம் ஏகமாக
மா வர்மத்துடனே
எதிர்த்தும் அதற்காகக்
கர்த்தர் பின் வாங்காரே
என்னென்ன அவராலே
நிர்ணைக்கப்பட்டதோ,
அதற்கு யாதென்றாலே
மாறாட்டம் வருமே.
6. இக்கட்டுகளினாலே
கலங்கினோனே, நீ
திடங்கொள், கர்த்தராலே
இக்கட்டின் ராத்திரி
சந்தோஷமாக மாறும்,
சற்றே பொறுத்திரு;
நீ பூரிப்பாய்க் கொண்டாடும்
நாள் கிட்டுகின்றது.
7. உன் கவலைகளுக்கு
இன்றே விடைகொடு,
இனி விசாரத்தக்கு
இடங்கொடாதிரு
நீ ஆளுந் தேவனல்ல,
நீ பூச்சியென்றறி,
சருவத்திற்கும் வல்ல
கர்த்தர் அதிபதி.
8. பராபரன் ஆளட்டும்,
திவ்விய கையெல்லாம்
மா ஞானமாய் நடத்தும்;
உன் பேரில் உண்டாம்
மப்பான கவலைக்குத்
தெய்வீகச் செயலாய்த்
தெளிவுண்டாம் அன்றைக்கு
நன்றாய் மகிழுவாய்.
9. மெய்தானே, சிலநாளும்
தேற்றாமல், உனது
இக்கட்டை ஒருகாலும்
தாம் நீக்க மனது
இல்லாதோர்போல் ஒளிப்பார்
உன் அவதியிலே
ரட்சிக்கத் தாமதிப்பார்;
நீயோ திகையாதே.
10. நீ பக்தியை விடாமல்
பொருத்திருக்கையில்
கர்த்தர் நீ நினையாமல்
இருக்கும் நேரத்தில்
உன் துக்கத்தை அகற்ற
வெளிச்சம் காண்பிப்பார்;
நீ நன்மைக்காகப்பட்ட
சலிப்பை நீக்குவார்.
11. இவ்வாறாகப் பலத்த
ஜெயமும் பூரிப்பும்
ஆசீர்வதிக்கப்பட்ட
தெய்வீகத் தேற்றலும்
அடைந்து, இன்பமான
மன மகிழ்ச்சியாய்
அன்புள்ள மீட்பரான
கர்த்தாவைப்பாடுவார்.
12. கர்த்தாவே, எங்களுக்கு
எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு
நெருங்கி வந்திரும்,
ஆ, எங்களை திடத்தும்;
பரகதிக்குப் போம்
வழியிலும் நடத்தும்,
அப்போ பிழைக்கிறோம்.
P.Gerhardt, † 1676