262. என் உள்ளமே, என் முழு நெஞ்சே

1. என் உள்ளமே, என் முழு நெஞ்சே; நீ
கர்த்தாவுக்குன்னை நன்றாய் ஒப்புவி;
அவரோடுனக் கைக்கியம் உண்டாக
நீ அவர் சொந்தமாயிருப்பாயாக.

2. பிதாவே, என்னை ஏற்றுக்கொண்டிரும்,
தப்பாய் நான் செய்ததைப் பாராதேயும்;
என்மேல் இரங்கும், நான் ஆகாதபிள்ளை;
நான் பாவி என்பதை ஒளிக்கவில்லை.

3. என் மீட்பரே, நீர் என்னைச் சேர்ந்திரும்,
என் அக்கிரமத்தின் பாரம் யாவையும்
நீர்தான் சுமந்தீர் ஆட்டுக்குட்டியாக;
அதற்கடியேன் நீங்கலாவேனாக.

4. தேவாவியே, நீர் என்னை அப்புறம்
நற்பாதையில் நடத்தி, என் மனம்
நாளுக்கு நாள் புவிக்குத் தூரமாகப்
பரம சிந்தையைத் தருவீராக.

5. த்ரியேகரே, நான் எனக்கல்லவே,
உனக்குச் சொந்தமாயிருப்பேனே.
நான் இன்னும் இங்கே மண்ணில் தங்கினாலும்,
என் ஆவி விண்ணை ஆசிக்கும் எந்நாளும்.

6. எழும்பெழும்பென் முழுமனமே,
யாரால் உண்டானாயோ அவருக்கே
நேராகச் சென்று விண்ணுக்கு நீ ஏறு,
பராபரனண்டைக் கெப்போதும் சேரு.

Sigm. V.Birken, † 1681.