263. கர்த்தாவை நல்ல பக்தியாலே

1. கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலேயும் அவராலே
அன்பாய்க் காப்பாற்றப்படுவான்;
உன்னதமான கர்த்தரைச்
சார்ந்தோருக்கவர் கன்மலை.

2. அழுத்தும் கவலைகளாலே
பலன் ஏதாகிலும் உண்டோ,
நாம் நித்தஞ்சஞ்சலத்தினாலே
தவிப்பது உதவுமோ
விசாரத்தாலே நமக்குத்
தீங்கதிகரிக்கிறது.

3. உன் காரியத்தை நலமாகத்
திருப்ப வல்லவருக்கு
நீ அதை ஒப்புவிப்பாயாக;
விசாரிப்பார். அமர்ந்திரு
மா திட்டமாய்த் தயாபரர்
உன் தாழ்ச்சியை அறிந்தவர்.

4. சந்தோஷப்பிக்கிறதற்கான
நாள் ஏதென்றவர் அறிவார்;
அநேக நற்குணங்கள் காண
அந்தந்த வேளை தண்டிப்பார்
அசுப்பிலே திரும்பவும்
தெய்வன்பு பூரிப்பைத் தரும்.

5. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
என்றாபத்தில் நினையாதே;
எப்போதும் பாடும் நோவுமற்றோன்
பிரியனென்றும் எண்ணாதே
அநேக காரியத்துக்குப்
பின்னாலே மாறுதல் உண்டு.

6. கதியுள்ளோனை ஏழையாக்கி
மகா எளியவனையோ
திரவிய சம்பன்னனாக்கி
உயர்ந்த ஸ்வாமிக்கரிதே;
தாழ்வாக்குவார், உயர்த்துவார்
அடிக்கிறார், அணைக்கிறார்.

7. மன்றாடிப்பாடிக் கிறிஸ்தோனாக
நடந்து கொண்டுன் வேலையை
நீ உண்மையோடே செய்வாயாக;
அப்போ தெய்வாசீர்வாதத்தைத்
திரும்பக்காண்பாய்; நீதிமான்
கர்த்தாவால் கைவிடப்படான்.

Georg Neumark, † 1681.