282. நரரை ஞாயந்தீர்ப்பராய்க் கர்த்தாவின்

1. நரரை ஞாயந்தீர்ப்பராய்க்
கர்த்தாவின் மைந்தனான
அதிபதி ப்ரஸ்தாபமாய்
இறங்குகிறதான
நாள்கிட்டும்; அப்போ தீயிலே
எல்லாங் கரைந்து போகவே;
நகைப்பரியதாகும்.

2. எக்காளத்தின் முழக்கங்கள்
ஏத்திக்கிலுந் தொனிக்கும்,
அசுப்பில், செத்தவர் திரள்
எல்லாம் எழுந்து நிற்கும்;
உயிருடன் இருந்தோரே
ஓர் நிமிஷத்திலே அப்போ
அழியா ரூபாவார்கள்.

3. எல்லாரின் சிந்தைசெய்கையும்
வெளிப்படுவதற்கு,
இரண்டு புஸ்தகங்களும்
திறந்தவரவர்க்கு
நடந்ததற்குத் தக்கதாய்
பலன் அனந்த  காலமாய்
கொடுக்கப்பட்டுப் போகும்.

4. கர்த்தாவின் வேத வார்த்தையை
எண்ணாமல்,உலகத்துப்
பொய் வாழ்வு மேன்மை செல்வத்தைத்
தொடர்ந்து வந்தோய்வற்று
இச்சித்தவர்களுக்கையோ,
அவர்கள் சாத்தானோடப்போ
உபாதைக்குள்ளாவார்கள்.

5. ஸ்வாமி, என்பேர் அக்காலமே
ஜீவாகமத்தில் காண,
நீர் பட்ட காயங்களிலே
ஒதுங்கி, பக்தியான
விண்ணப்பத்தாலே கேட்கிறேன்;
ஆ, ஸ்வாமி, உம்மைப் பற்றினேன்
நீர் என்னைத்தள்ளமாட்டீர்.

6. நான் நீதிமான்களுடனே
நீர் எங்களுக்குத் தேடித்
திறந்த பரதீசிலே
சந்தோஷமாக ஏறிப்
பிழைக்க, என்னை நீர்தாமே
"ஆசீர்வதிக்கப்பட்டோனே,
வா" என்றப் போதழையும்.

7. ஆ, இயேசுவே, இவ்வுலகம்
வியாகுலம் உண்டாக்கும்
சிறையிருப்பும் சஞ்சலம்
நிறைந்த பள்ளத்தாக்கும்,
ஞாயாதிகர்த்தா, தீங்கெல்லாம்
முடியுங்காலம் எப்போதாம்,
ரட்சிக்க வாரும், ஆமென்.

Barthol. Ringwaldt, † 1599.