1. ஆ, உன்னத எருசலேமே, நீ
என் முழு வாஞ்சைதான்;
வாஞ்சிப்பவன் விண் ஆசையால் இனி
தன் வசமாயிரான்;
உன்னையே நாடும் ஆவி
எவ்வனம் நாட்டுக்கும்,
எம்மலைக்கும் மேல் தாவி
இப்பூமியை விடும்.
2. களிப்புடன் பிதாவின்வீட்டிலே
என் ஆவி சேரவும்;
உயிர்த்தெழும் பெரிய நாளுக்கே
அங்கே மறையவும்
நான் அதைத் தெய்வக்கைக்கும்
மாறாத உண்மைக்கும்
ஒப்புக் கொடுத்து வைக்கும்
நன்னாள் எப்போ வரும்.
3. அச்சணத்தில் இப்பாரத்தேகத்தைக்
களைந்த ஆத்துமம்
மா வேகமாய் எழுந்தாகாயத்தைக்
கடக்கும் நிச்சயம்;
தூதர்களின் கரத்தில்
எடுக்கப்படவே
எலியா வாகனத்தில்
பரத்துக்கேறுமே
4. பரத்திலே மின்னும் ஊர் வாசல்கள்
இப்போ தெரியுமே.
நான் வெகுநாள் ஆசித்தமெய்மைகள்
காட்சிக்குத் தோன்றுமே
பூமியின் மாயை போக
வேண்டுமென்றேங்கிறேன்.
இப்போது பரலோக
மெய்ப்பேறு பெறுவேன்.
5. மாகூட்டமாய் எனக்கெதிர்கொண்டே
வருஞ்சிறந்தோர் யார்?
முன் பூமியின் உப்பாம் இவர்களே
இப்போ முடி பெற்றார்;
மகிழ்ச்சியாய் இப்போது
இச்செயக் கூட்டமே
என்னைச் சிநேகத்தோடு
அங்கேற்றுக்கொள்ளுமே.
6. பூர்வீகராந்தீர்க்கதரிசிகள்
மகாத்துமாக்களும்
வாதைக்கஞ்சாக் கிறிஸ்துவின்
மெய்ப்பக்தர் யாவரும்
சிறப்பாய் அசைவாடி
தென்படுவார், இதோ;
வெளிச்சத்தில் கொண்டாடி
ஆள்வார்கள் அல்லவோ.
7. கடைசியாய் நான் பாரதீசிலே
உட்பட்டப் பிறகு
சந்தோஷத்தால் என் மனம் பொங்குமே,
வாய்பாடும் துதித்து;
இனி என் அல்லேலூயா
என் ஓசியன்னாவும்
வானோர்கள் பாட்டின் தூய
இன்பத்தோடிசையும்.
8. ஆதியிலும் இப்போதும் என்றைக்கும்
இருக்கும் வண்ணமாய்
தோத்திரங்கள் வானங்கள் யாவிலும்
ஒலிக்கத் தக்கதாய்க்
கோடா கோடியர் நாக்கும்
வாத்திய ஓசையும்
எச்சீவன்களின் வாக்கும்
ஆர்ப்பரித்தே வரும்.
J.M.Meyfart, † 16