1. மோட்சத்துக்குள்ளாக்கிய நல்லோரே,
நீங்கள் வெகு பாக்கியமுள்ளோரே,
ஜெயங்கொண்டீர்கள்,
எவ்விக்கட்டுக்கும் புறம்பானீர்கள்.
2. இம்மை, சிறைச்சாலைக்குச் சமானம்,
உலகம் விசாரமுள்ள தானம்;
புவியின் லாபம்
வேலையோடே கூடும் மனஸ்தாபம்.
3. நீங்களோவெனில் புதைக்கப்பட்டு,
உங்கள் மண்ணறைகளில் நோவற்றுக்
கிடக்கிறீர்கள்,
உங்கள் ஓய்வில் துயரப்படீர்கள்.
4. கிறிஸ்து உங்கள் கண்ணீரைத் துடைத்தார்,
உங்களைப் பரகதிக்கழைத்தார்;
நரரின் காது
நீங்கள் கேட்கும் ஓசையைக் கேளாது,
5. பரம இருப்பு எங்களுக்கும்
இதைப்பார்க்க நலமாயிருக்கும்;
இங்கே தவிப்பு
அங்கே சேர்ந்தோமேயானால் கெலிப்பு,
6. கிறிஸ்துவே, அடியாரை அழையும்,
எங்களை இரட்சித்தங்கே வையும்,
சன்மார்க்கத்தார்கள்
அங்கே உம்மண்டையில் வாழுவார்கள்.
Simon Dach, † 1659