1. நாம் கொஞ்ச நாள் வருத்தப்பட்ட
பிற்பாடு மறுமையிலே
உபத்ரவமும் நோவுமற்ற
மகிழ்ச்சியா யிருப்போமோ;
விதை விதைத்தவனுக்கு
அங்கறுப்புண்டாகின்றது.
2. சன்மார்க்கன் இங்கேயுந் தித்திப்பு
ருசித்து மகிழுகிறான்;
இதெல்லாமோ நில்லாக் களிப்பு
இங்கவன் பரதேசத்தான்;
புவியில் அவன் பூரிப்பே
மாறுதலாயிருக்குமே
3. இங்கே சரீர நோவுமுண்டு
லௌகீகத் தொந்தரைகளும்
துரிச்சையோடே போரும் உண்டு,
பலமுறை விசாரமும்
குறைகளும் அவனுக்கு
வேறே பேரால் உண்டானது.
4. பலமுறைச் சன்மார்க்கன் தாழ்வை
அடைந்தொடுக்கப் படுவான்.
ஆகாதவனோ இங்கே வாழ்வை
அனுபவித்திருக்கிரான்;
ஆ, இங்கே மனிதனுக்குப்
பல பாடிருக்கின்றது.
5. இங்கே மெய் வாழ்வகப்படாது
அங்கே சுகிர்தம் அடைவேன்;
அங்கே மந்தாரங்கள் இராது,
அங்கே உபத்ரவப்படேன்,
நான் முகமுகமாய் அங்கே
கர்த்தாவைத் தரிசிப்பேனே.
6. கர்த்தாவின் கைக்கடங்கிவந்த
நான் அவர் சந்நிதியிலே
அப்போ களித்துக் கொண்டானந்த
மகிழ்ச்சியை அடைவேனே,
அங்கடியேனுக் கென்றைக்கும்
கதியின்மேல் கதி வரும்.
7. என் கண்ணுக்கிங்கே தெளிவாகக்
காணாததும், என்புத்திக்கு
ஆராய்ந்தறிய அரிதாக
இருந்ததும் உண்டே, அது
தன் வயணங்களோடெல்லாம்
அங்கெனக்கு வெளிச்சமாம்,
8. நீர் பரிசுத்தர், நீர் மாசற்ற
வெளிச்ச மென்றென் பரம
பிதாவுக்கும் அடிக்கப்பட்ட
தேவாட்டுக் குட்டிக்கும் மகா
புகழ்ச்சியை வானோருடன்
அப்போது நான் தருபவன்.
9. அங்கே நான் தேவதூதரோடே
ஏக சுத்தாங்க மேன்மையாய்
இருக்கும் போதவர்களோடே
நெருங்கிய சாவாசமாய்
இருப்பேன், அதனால் அப்போ
இருக்கும் இன்பங்கொஞ்சமே.
10. நற்பாதையை இங்குண்மையாக
எனக்குக் காட்டினவனை
நான் அங்கே மெத்த எண்ணமாக
அநேக ஆயிரம் முறை
மினவுவேன், அவனுடன்
கர்த்தாவை நான் துதிப்பவன்.
11. என் ஏழை ஊழியத்தினாலே
ரட்சிக்கப்பட்ட ஒருவன்
அங்கென்னை வாழ்த்தி, நான் உன்னாலே
இம்மோட்ச வாழ்வைப் பெற்றவன்
என்றால் இருவரும் அப்போ
எத்தன்மையாய் மாகிழாமோ!
12. இம்மையிலே நமக்குறைக்கும்
எல்லாக் கசப்புங் கஸ்தியும்
மோட்சானந்தத்தில் என்றென்றைக்கும்
நமக்குக் கர்த்தரால் வரும்
பலனின்முன் எம்மாத்திரம்,
அது மா அற்பக் காரியம்.
C.F. Gellert, † 1769.