1. மெய்யோய் வங்கின்னும் வைத்திருக்கும்,
இளைத்த நெஞ்சமே தெளி;
கட்டுண்டிருளிலே படுக்கும்
நீ துக்கியாதிரு இனி;
இடத்தை ஆயத்தப்படுத்த
முன்போன உன் இரக்கமுற்ற
கர்த்தாவை நோக்கக்கடவாய்;
உன் போரும் ஓட்டமும் கஸ்தியும்
மா சீக்கிரத்திலே முடியும்;
அப்போதுன் ஓய்வில் சேருவாய்.
2. பிதா ஒர்க்காலும் முடியாது
இவ்வோய்வை மனுப்புத்திரர்
உண்டாகுமுன் அளவில்லாத
அன்பாலே முன் குறித்தவர்,
அதைச் சம்பாதிப்பதற்காகத்
தேவாட்டுக் குட்டியாகச் சாக
இரட்சகர் மனங்கொண்டார்.
இளைத்தவர்களை இப்போது
அவர் மிகுந்த பட்சத்தோடு
இவ்வோய்வுக்கே அழைக்கிறார்.
3. பல சுமைகளைச் சுமந்து
தியங்கும் ஆத்துமாக்களே,
விசாரம் யாவையும் மறந்து
கலக்கம் பயமின்றியே
வாருங்கள்; பகல் பாரத்தையும்
அகோரமான வெயிலையும்
சகித்த உங்களைத் தள்ளார்;
குற்றஞ் சிவேரென்றிருந்தாலும்
பிசாசு லோகம் சீறினாலும்,
கெட்டோரைச் சேர்ந்துத்தேற்றுவார்.
4. அங்கேதான் துக்கத்தைத் தொலைத்து
நாம் ஓய்வோம் சமாதானத்தில்
இளைத்தோரே, இதைநினைத்து
படுங்கள் அவர் மடியில்;
ஜெயித்தோர் கூட்டத்தை நாம் சேர
தடையில்லாமல், அங்கே களித்து
ஜெயங்கொண்டாடத் தீவிரித்து,
எழும்புன் ஓய்வுகிட்டிற்றே.
I.S. Kunth, † 1779.