1. சபையின் ஆஸ்திபாரம்
நன் மீட்பர் கிறிஸ்துவே.
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே;
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்,
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்.
2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்,
சபை ஒன்றே ஒன்றாம்;
ஒரே விஸ்வாசத்தாலும்
ஒரே ரட்சிப்புண்டாம்;
ஓர் நாம நமஸ்காரம்
இணைக்கும் சபையை;
அதற்கோர் ஞானாகாரம்
ஓர் ஏக நம்பிக்கை.
3. கிறிஸ்தோரைச் சாத்தான் லோகம்
பயமுறுத்திடும்;
பின் வாங்கினோரின் த்ரோகம்
மனத்தை வாதிக்கும்
சபை ஏங்கலின் சத்தம்;
"எம்மட்டும்" என்பதாம்;
இராவில் கண்ட துக்கம்
காலையில் பூரிப்பாம்.
4. போராட்டம் அவமானம்
இன்னா கஷ்டத்திலும்
நீங்காத சமாதானம்
மெய்ச் சபை வாஞ்சிக்கும்
இனி விண் காட்சி கண்டு
அதென்றும் போர் எல்லாம்
தீர்த்தே, வெற்றி சிறந்து
மகிழும் சபையாம்
Aurelia: 7676.D
Samuel J. Stone, † 1866.