291. இயேசுவே, இயேசுவே, ஆத்துமத்தின்

1. இயேசுவே, இயேசுவே,
ஆத்துமத்தின் நேசரே,
என்றும் உம்மைக் களிப்பாக
தரிசித்துப் பணிவாகத்
தொழுவதென் வாஞ்சையே

2. ஒளியே, ஒளியே,
அருள் பூண்ட பொழுதே
எல்லா நீதிமான்களோடும்
நான் உமக்கெதிர் கொண்டொடும்
நாள் கிட்டாதோ இப்போதே.

3. இனிமை, இனிமை,
தூதர் பாடும் கீர்த்தனை
மண்ணைவிட்டு விண்ணில் ஏற
இன்றைக்கே சீயோனில் சேர
செட்டை தந்தால் மாநன்மை

4. அங்கே நான், அங்கே நான்,
சேரும்போது பாக்கியவான்
சீயோன் வீதி பொன்துலங்கும்
தேவனே, அதில் விளங்கும்
மகிமை யார் சொல்லுவான்

5. அமுதம், அமுதம்,
பரதீசின் பாக்கியம்;
ஜீவ மரத்தில் புசிப்போம்,
பரவசமாய்க் களிப்போம்.
என்னைச் சேரும் அவ்விடம்.

G.Knak, † 1878.