294. சாந்தமுள்ள இயேசுவே, பாலன்

1. சாந்தமுள்ள இயேசுவே,
பாலன் முகம் பாருமே;
என்னில் தயை கூறுமேன்,
என் உள்ளத்தில் தங்குமேன்.

2. உம்மை நாடிப் பற்றுவேன்,
என்னை ஏற்றுக் கொள்ளுமேன்;
மோட்ச ராச்சியத்திலே
எனக்கிடம் தாருமே.

3. இன்ப முகம் காட்டுவீர்.
என்னைக் கையில் ஏந்துவீர்;
உமக்கேற்றோன் ஆகவே
சுத்தம் பண்ணும், இயேசுவே

4. தீயோர் துஷ்ட செய்கையை,
நான் செய்யாபடி என்னை
நீர் நடத்தி ஆளுமே,
என்னில் வாசம் பண்ணுமேன்.

5. ஆ, அன்புள்ள இயேசுவே,
அடியேனைப் பாருமே,
என்னை அன்பாய் ரட்சியும்
மோட்ச பாக்கியம் அருளும்.

C. Wesley, † 1742.