300. எருசலேம் என் ஆலயம்

1. எருசலேம் என் ஆலயம்,
ஆசிக்கும் வீடதே;
நான் அதைக்கண்டு பாக்கியம்
அடைய வேண்டுமே

2. பொன் தளம் போட்ட வீதியில்
எப்போதுலாவுவேன்?
பளிங்காய்த் தோன்றும் தலத்தில்
என்றைக்குத் தொழுவேன்?

3. எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் ஆம்மோட்சத்தார்
ஓய்வின்றி இயேசுவை ஒன்றாய்த்
துதித்துப் பாடுவார்.

4. நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சித்துலோகத்துன்பத்தில்
களிப்பேன், இயேசுவே.

5. எருசலேம் என் ஆலயம்,
நான் உன்னில் வாழுவேன்;
என் ஆவல், என் அடைக்கலம்;
எப்போ கண்டடைவேன்?

SP. S. 80 Southwell; C.M.
Frances Baker, † 1628.