1. ஒப்பில்லாத் திரு இரா!
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்,
அன்பின் அதிசயமாம்.
2. ஒப்பில்லாத் திரு இரா!
யாவையும்
ஆளும் மா
தேவ மைந்தனார் பாவிகளை
மீட்டு விண்ணுக்குயர்த்த, தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்,
எத்தனை தாழ்த்துகிறார்.
3. ஒப்பில்லாத் திரு இரா!
ஜென்மித்தார் மேசியா
தெய்வத்தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து,
பராபரணைப்
பூரிப்பாய்த்தோத்தரிப்போம்,
பூரிப்பாய்த்தோத்தரிப்போம்.
H.BZ. Stille Nacht: Irregular Adopted from
Latin Song, by Joseph Mohr † 1818.