1. கிறிஸ்தோரே, எல்லாரும்
களி கூர்ந்துபாடி,
ஓ, பெத்லகேம் ஊருக்கு வாருங்கள்.
தூதரின் ராஜா
மீட்பராய்ப் பிறந்தார்.
நமஸ்கரிப்போமாக,
நமஸ்கரிப்போமாக,
நமஸ்கரிப்போமாக, கர்த்தாவை.
2. மகத்துவ ராசா,
சேனையின் கர்த்தாவே,
அனாதி பிறந்த மா தேவனே,
முன்னணை தானே
உமக்கேற்கும் தொட்டில்
நமஸ்கரிப்போமாக,
நமஸ்கரிப்போமாக,
நமஸ்கரிப்போமாக, கர்த்தாவை.
3. விண் மண்ணிலும் கர்த்தர்
கனம் பெற்றோர் என்று
தூதாக்களே, பாக்கியவான்களே
ஏகமாய்ப் பாடி,
போற்றித் துதியுங்கள்,
நமஸ்கரிப்போமாக,
நமஸ்கரிப்போமாக,
நமஸ்கரிப்போமாக, கர்த்தாவை.
4. அனாதி பிதாவின்
வார்த்தையான கிறிஸ்தே,
நீர் மாமிசமாகி இந்நாளிலே
ஜென்மித்தீர் என்று
உம்மைத் தோத்திரிப்போம்.
நமஸ்கரிப்போமாக,
நமஸ்கரிப்போமாக,
நமஸ்கரிப்போமாக, கர்த்தாவை.
H.B.Z. Adeste Fideles:
Irregular Latin Hymn of 17th century