318. சிலுவைக் கொடி முன்செல்ல

1. சிலுவைக் கொடி முன்செல்ல
செல்வார் நம் வேந்தர் போர் செய்ய;
நம்ஜீவன் ஆனோர் மாண்டனர்
தம் சாவால் ஜீவன் தந்தனர்

2. மெய்ச் சத்யம் நாட்டப் பாடுற்றார்,
நல் வாலிபத்தில் மரித்தார்;
நம் மீட்பர் ரத்தம் பீரிற்றே,
நம்நெஞ்சம் தூய்மை ஆயிற்றே.

3. முன்னுரை நிறைவேறிற்றே;
மன்னர் தம் கொடி ஏற்றுமே;
பலக்கும் அன்பின் வல்லமை
சிலுவை வேந்தர் ஆளுகை.

4. வென்றிடும் அன்பின் மரமே!
வெல்வேந்தர்  செங்கோல் சின்னமே!
உன் நிந்தை மாட்சி ஆயிற்றே,
மன்னர் உன்மீதி ஆண்டாரே.

5. உன்னில் ஓர்நாளில் ஆண்டவர்
மன்னுயிர்சாபம் போக்கினர்;
ஒப்பற்ற செல்வம் தம்மையே
ஒப்பித்து மீட்டார் எம்மையே.