319. தந்தை, சுதன், ஆவியே

1. தந்தை, சுதன், ஆவியே,
ஸ்வாமியாம் த்ரியேகரே,
வானாசன மீதுற்றே,
எங்களுக்கு இரங்கும்.

2. நிந்தை, கஸ்தி, தேவரீர்
எங்கள் பொருட்டைந்தீர்;
தாசர் வேண்டுதலை நீர்
கேளும், தூய இயேசுவே.

3. சீஷர் மூவர் தூங்கவே,
கெத்செனே காவிலே
உற்ற வேதனையாலே
கேளும், தூய இயேசுவே.

4. தந்தை சித்தம் ஆகவும்;
வந்த பாத்ரம் நீங்கவும்,
நீர் ஜெபித்ததாலேயும்
கேளும், தூய இயேசுவே.

5. யூதாஸ் உம்மைக் காட்டவே,
யூதர் உம்மைக் கட்டவே,
சிறைப்பட்டதாலுமே
கேளும், தூய இயேசுவே.

6. வாரால் பட்ட காயமும்
போர்த்த சிவப்பங்கியும்,
முள்ளின் கிரீட மூலமும்
கேளும், தூய இயேசுவே.

7. ராஜன் உம்மைத் தள்ளியே,
கள்ளன் பரபாசையே
கேட்டுக் கொண்டதாலுமே
கேளும், தூய இயேசுவே.

8. "சிலுவையில் அறையும்"
என்று யூதர் கூவவும்,
சாகச் சென்றதாலேயும்
கேளும், தூய இயேசுவே.

9. நீர் சுமந்த க்ருசாலே,
நீர் குடிக்கும்படிக்கே
தந்த காடியாலுமே
கேளும், தூய இயேசுவே.

10. கால் கரத்தில் ஆணியும்,
காட்டும் மேல்விலாசமும்,
காரிருள் நிமித்தமும்
கேளும், தூய இயேசுவே.

11. ஆடை சீட்டுப்போட்டதால்,
சாவின் வாதை பார்க்குங்கால்
யூதர் செய்த நிந்தையால்
கேளும், தூய இயேசுவே.

12. சொன்ன ஏழு சொற்களால்,
சோர்ந்து தலை சாய்ந்ததால்,
உந்தன் பிரேதச் சேமத்தால்
கேளும், தூய இயேசுவே.

13. சோதனை நெருக்கத்தில்
நாங்கள் தொய்ந்து போகையில்
உந்தன் சாவின் வன்மையில்
காரும், தூய இயேசுவே.

14. உம் சிலுவைப் பொருட்டே
யாவும் நஷ்டம் எனவே
நாங்கள் எண்ணும்படிக்கே
காரும், தூய இயேசுவே.

15.  நாங்கள் உம்மைப் பற்றியே,
சாவின் நோவைக் கடந்தே
உம் சமுகம் சேரவே
காரும், தூய இயேசுவே.