1. கிறிஸ்தென்ற பாவநாசர்
உயிர்த்தெழுந்தார்
பலியாய்ச் சென்றார்
உயிர்த்துச் சாவைவென்றார்.
ஆமென், அல்லேலூயா.
2. மாசற்றோர் தெய்வக்கோபத்தைச்
சுமந்து நீசரை மா
சுவாமியோடே
சினேகமாக்கினாரே
ஆமென், அல்லேலூயா.
3. பேய் சாபம் சாவுயிர் அருள்
எல்லாம் அவர் கைக்குள்
சேர்வார் அனைவர்
அனுக்ரகம் அடைவர்
ஆமென், அல்லேலூயா.