321. துக்கமுள்ள மாதா நின்று

1. துக்கமுள்ள மாதா நின்று
சிலுவையின் கீழ்க்குனிந்து
மைந்தனுக்காய் அழுதாள்.

2. ஆ, மகா அகோரமான
இந்தத்  துயரத்தைக் காண
யாராலும் முடியுமோ?

3. இந்த ஆபத்தில் கிடந்த
ரட்சகரின் தாயைக்கண்ட
கண் எல்லாம் நனையாதோ?

4. ஏன் இவ்வாதை? எந்தத்தீங்கும்
இயேசு சாவினாலே நீங்கும்
என்றரி, என் மனமே.

5. மானிடர் பொல்லாப்புக்காக
அவர் வாதைப்பட்டுச் சாக
சிலுவையில் தொங்கினார்.

6. தீர்க்கர் வாக்கு நிறைவேறும்
நாளிலே மெய்ச்சபைசேரும்
சிலுவையண்டையிலே.