325. தேவாவியின் வரங்களால்

1. தேவாவியின் வரங்களால்
அப்போஸ்தலர் நிறைந்ததால்
பல்வேறு மொழிகளிலே
ரட்சிப்பைக் கூறினார்களே
தேவாவியைத் தயாபரர்
அளித்த அன்புக்குப் புகழ்.

2. மெய் தேவ வார்த்தையை எல்லாப்
புறத்திலும் பிரசங்கிக்க
அன்புள்ள இயேசு சுவாமியார்
அவர்களை அனுப்பினார்
தேவாவியைத் தயாபரர்
அளித்த அன்புக்குப் புகழ்.

3. தெய்வீக ஆவி என்கின்ற
வரத்தை வாங்குங்கள் எல்லா
நல் அறிவையுந் தருவார்,
திடம் பலம் உண்டாம் என்றார்
தேவாவியைத் தயாபரர்
அளித்த அன்புக்குப் புகழ்.

4. தூதர்கள் முன்னே உங்களை
நிறுத்தினால், மேஞ்ஞானத்தைப்
பகரும் வாயைத் தருவார்
பகர்வர் அவர் தாநனென்றார்
தேவாவியைத் தயாபரர்
அளித்த அன்புக்குப் புகழ்.

5. சுத்தாங்கத்தின் வரங்களைக்
கொடுக்குந் தேவ ஆவியை
எல்லா வணக்கத்தோடேயும்
துதியுங்கள் அனைவரும்
திரியேகருக்கு என்றைக்கும்
தோத்திரம் உண்டாகவும்.