1. சிருஷ்டிகர்க்குத்
தோத்திரம் புகழ்ச்சி!
அவரின் நேசம்
மா பெரியதாமே.
மந்தனைத் தந்த
பரம பிதாவைப்
போற்றுவோமாக.
2. ரட்சகருக்குத்
தோத்திரம் புகழ்ச்சி!
கிறிஸ்து கெட்டோரைத்
தேடி ரட்சித்தாரே.
நாம் ஒருமித்து,
அவரைத் துதித்துப்
போற்றுவோமாக.
3. தேற்றரவாளன்
தோத்திரிக்கப்பட்டோர்,
திருச்சபையைக்
கிறிஸ்துவண்டை காப்பார்.
சற்குருவான
ஆவியை எல்லாரும்
போற்றுவோமாக.