1. பராபரனைப் பணிவோம்,
பரத்தினின்றும் வார்த்தையாம்,
பார் எங்குமே பரவ ஏற்றுவோம்.
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.
2. உயர்ந்த மலை மீதிலும்
உம் நாம வன்மை சார்ந்துமே,
உம் சபையே உயரும் என்றென்றும்.
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.
3. உம் நாம மேன்மை லோகத்தார்
உம் சபை சேர்ந்து கூறுவார்;
உள் மகிழ்வாய் உந்தன்மெய்த்தொண்டராய்
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.
4. பார் மாந்தர் உந்தன் நாமமே
பாடுவார் ஜெய கீதமே;
கேரூப் சேரூப் சேர்ந்திசைப்பார் ஒன்றாய்;
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.