334. இயேசுவே இவ்விடத்தில்

1. இயேசுவே இவ்விடத்தில்
இருக்கிறாரல்லோ
எவர்கள் ஆத்துமத்தில்
தெய்வபயம் உண்டோ,
அவர்கள் கண்ணுக்கு
இரட்சிப்பின் வழியும்
மோட்சானந்த கதியும்,
இங்கே தெரியுது.

2. துக்கத்தினால் நிறைந்து
மெய் விசுவாசமும்
நற் சிந்தையும் அடைந்து
இப்பந்திக்கு வரும்
மனத்தரித்திரன்
தள்ளப்படான், அன்பாக
அவன் பங்காளனாகச்
சேர்க்கப்படுகிறான்.

3. யார் பிரயாசைப்பட்டுப்
பாரஞ் சுமந்தாரோ,
அவர்கள் பயமுற்று
சேரட்டும், இங்கப்போ
கிறிஸ்தின் சரீரமும்
இரத்தமும் அனந்த
கதி உண்டாக, அந்தப்
பேருக்கப்படும்.

4. கர்த்தாவுட மக்களை
இப்பந்தி தேற்றது,
தங்கள் பலட்சயத்தை
உணர்ந்தவருக்கு
அத்தால் பலன் வரும்,
பேய்க்கு மா பக்தியாலே
எதிர்ப்பதற்கத்தாலே
மனந்திடப்படும்,

5. நாம் மனத்தாழ்மையோடே
இருந்து, பாவத்தை
மெய் மனஸ்தாபத்தோடே
நினைத்து, நீதியை
மா வாஞ்சையுடனே
தொடர்ந்தால், கிறிஸ்து தான்
இந்த விருந்தால் வரும்
பயன் பெரிதே.

6. இப்பந்தியில் பெரிய
அன்பு விளங்குதே,
ஆகையினால் திவ்விய
சிநேகத்துடனே
அடுத்தவனையும்
நாம் நேசிப்பதற்காக
அது நன்மை நன்றாக
எழுப்பிப் போதிக்கும்.

7. ஆ, நானும் ஆசையாக
இங்கே வருகிறேன்;
என் இயேசுவே அன்பாக
நீர் என்னை நோக்குமேன்
நீர் எனக்கும்மையே
ராப்போசனத்தினாலே
கொடுக்கிறீர், இத்தாலே
நான் என்றும் வாழ்வேனே.

8. ஆ, என்னைத் தயவாக
இப்போதுயிர்ப்பியும்,
நான் உம்மைச் சீஷனாகப்
பின் சென்றேன் நேரமும்
மாறாட்ட மின்றியே
என் முடிவுமட்டாக
உம்மில் நிலைப்பேனாக
என் ஸ்வாமி இயேசுவே.