1. இயேசு கிறிஸ்து நமக்காக
தேவ ஆட்டுக்கிட்டியாக
மாண்டு, மா அன்புடனே
அந்நாளில் நம்மை மீட்டாரே.
2. இதை ஞாபகப்படுத்தத்
தம்முடைய பரிசுத்த
மேனி ரத்தத்தையுமே
ஊணாக இங்கே தாராரே.
3. இதில் சேர்ப்பவர் நன்றாகத்
தம்மைத்தாம் ஆராய்வாராக,
ஏனெனில் அபாத்திரன்
ஆகாப் பயன் அடைபவன்.
4. உனக்காய் சுதனைச் சாகத்
தந்து, இத்தனை நன்றாக
இப்போதுன்னைப் போஷிக்கும்
பிதாவை நீ புழவும்.
5. இது பாவத்தால் அடைந்த
கனதுக்கத்தால் நிறைந்த
பிணியாளிக்கு ஊணாம்
என்றுண்மையாய் நீ நம்பலாம்
6. இதை இயேசுவன்பைச் சேரும்
நெஞ்சு கண்ணீரோடே தேடும்
திரும்பாத மனதாய்ச்
சேராதே, நேரஸ்தனாவாய்.
7. இங்கே வா நாம் அனுசாரி,
நோயாளிக்கே பரிகாரி,
என்னைப் பற்று, ஏழையே,
என்றவர் தானே சொன்னாரே.