341. ஏசுவே, ஏசுவே உமக்கே

1. ஏசுவே, ஏசுவே
உமக்கே தோத்திரமே
சிந்தின ரத்தத்தினாலே
பகையைக் கோபத்தையும்
தள்ளினபடியினாலே
என்னை மீட்டு இரட்சித்தீரே,
இயேசுவே, இயேசுவே

2. கிறிஸ்துவே, கிறிஸ்துவே
தேவரீருக்குப் பிதா
தெய்வ அபிஷேகஞ் செய்தார்,
சந்தோஷத்தினுடைய
ஆவியானோரைக் கொடுத்தார்.
அபிஷேகம் பண்ணப்பட்டீரே,
கிறிஸ்துவே, கிறிஸ்துவே

3. ஐயரே, ஐயரே
ஞான புத்தி கற்பியும்
ஞான அர்த்தம் ஞான சிந்தை
உபதேசித்தருளும்;
ஞானமாகப் போதகத்தைச்
சொல்லும், நீர் தீர்க்கதரிசியே,
ஐயரே, ஐயரே

4. குருவே, குருவே
பாவியானவர்களை
நீர் ரட்சிக்கத்தக்கதாகச்
சுத்தமான ரத்தத்தை
நீர் தெளித்தீர், திரளாக;
நன்மையைக் கொடுக்கிறவரே,
குருவே, குருவே

5. ராசாவே , ராசாவே
சுத்த சபை உமக்கு
விசுவாசப் பயத்தோடே
கீழ்ப்படிந்து உள்ளது,
பலத்தோடே பட்டத்தோடே
அதனை நடத்தி ஆள்வீரே
ராசாவே , ராசாவே

6. சீவனே, சீவனே
தாக்கமுள்ள எனக்கும்
ஞானத் தண்ணீரைக் கொடுத்து,
தாகத்தைத் தீர்த்தருளும்;
தயவோடே என்னைப் பார்த்துச்
சீவன் ஊறும் ஞானக் கிணறே
சீவனே, சீவனே