1. உன்னதமான
மா இராசாவான
சீர்சிறந்த இயேசுவே,
உம்மில் களித்து
உம்மைத் துதித்து
நேசித்துக் கொண்டிருப்பேனே.
2. பூ மலர்க் காடும்
பயிர் ஓங்கும் நாடும்
அந்தமும் சிறப்புமாம்.
இயேசுவின் அந்தம்
எனக்கானந்தம்
எம் மனத்தின் குளிர்ச்சியாம்.
3. அண்டங்கள் யாவும்
சூரியன் நிலாவும்
அழகாய்ப் பிரகாசிக்கும்;
அவர் முன்பாக
மா சோதியாக
மினுங்குமெல்லாம் மங்கிப்போம்
4. விண் மண்ணுடைய
மகிமை மறைய
அவர் அழகானவர்.
வானத்திலேயும்
பூமியிலேயும்
நான் நாடினோர் என் இரட்சகர்
From the town Muenster 1677.