346. எல்லாருக்கும் மா உன்னத

1. எல்லாருக்கும் மா உன்னத,
கர்த்தாதி கர்த்தரே,
மெய்யான தெய்வ மனிதர்,
நீர் வாழ்க, இயேசுவே.

2. விண்ணில் ப்ரதானியான நீர்
பகைஞர்க்காகவே
மண்ணில் இறங்கி நரித்தீர்;
நீர் வாழ்க, இயேசுவே.

3. பிசாசு, பாவம் உலகை
உம் சாவால் மிதித்தே,
ஜெயித்தடைந்தீர் வெற்றியை;
நீர் வாழ்க, இயேசுவே.

4. நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே;
பரத்தில் செங்கோல் செலுத்தும்
நீர் வாழ்க, இயேசுவே.

5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
என்றைக்கும் வாழவே,
பரம வாசல் திறந்தோர்
நீர் வாழ்க, இயேசுவே.

Miles Lane:C.M.Irregular
Edward Perronet † 1792