347. பிளவுண்ட மலையே புகலிடம்

1. பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும்,
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும்
நீக்கும்படி அருளும்.

2. எந்தக் கிரியை செய்துமே.
உந்தன் நீதி கிட்டாதே;
கண்ணீர் நித்தம் சொரிந்தும்
கஷ்ட தவம் புரிந்தும்,
பாவம் நீங்க மாட்டாதே;
நீரே மீட்பர் இயேசுவே.

3. யாதுமற்ற ஏழை நான்,
நாதியற்ற நீசந்தான்;
உம் சிலுவை தஞ்சமே,
உந்தன் நீதி ஆடையே;
தூய ஊற்றை அண்டினேன்;
தூய்மையாக்கேல் மாளுவேன்.

4. நிழல்போன்ற வாழ்விலே,
கண்ணை மூடும் சாவிலே,
கண்ணைக்கெட்டா லோகத்தில்
நடுத்தீர்வை நாளிலே,
பிளவுண்ட மலையே,
புகலிடம் ஈயுமே.

A.M.Toplady † 1778