349. இயேசுவை யல்லாமல் நாங்கள்

1. இயேசுவை யல்லாமல் நாங்கள்
மிகவும் நிர்ப்பாக்கியர்
நம்மை ஏதுமற்ற நாங்கள்
கெட்டுப்போன மனிதர்
இயேசு சுவாமி இங்கே எங்கும்
சிறுமையுண்டே இரங்கும்.

2. உம்மையே அல்லாமல் நாங்கள்
அந்தகாரப்பட்டவர்,
சர்ப்பத்தின் விஷக்கடியால்
நாங்கள் வியாதியஸ்தர்
ஏறிய விஷம் அன்றன்றும்
வேதனையை உண்டுபண்ணும்.

3. நீர் இராவிட்டால், பிசாசும்
நரக பாதாளமும்
நம்மை மிகவும் நடுங்கிப்
பண்ணும், மனச்சாட்சியும்
நாம் எல்லாக் கோபாக்கினைக்கும்
உள்ளானோம் என்றுரைத்திடும்

4. இந்தக் கெட்ட லோகமெங்கும்
வைத்த கண்ணி மிகுதி.
உம்மையே அல்லாமல் நாங்கள்
தப்பிப் போவதெப்படி;
அது இன்பமாய் அழைக்கும்,
துன்பத்தாலேயுங் கலைக்கும்.

5. நோயாளி எழுந்திருந்து
தடுமாறியவிதம்
பார்த்தால் ஆ, அன்புள்ள
ஸ்வாமி,
எத்தனை பலட்சயம்,
எத்தனை தரம் எழுந்து,
இடறி விழுவதுண்டு.

6. இயேசுவே, பலத்தைத் தாரும்,
அந்தகாரத்தை அறும்;
ஞானக்கண்ணைத் தெளிவித்து,
சமூகத்தைக் காண்பியும்,
பொழுதே, அன்பாய் விளங்கும்,
அப்போதெங்கள் நோய் அடங்கும்.

7. இயேசு கர்த்தரே; பிசாசை,
எங்கள் கால்களின் கீழாய்
நீர் நசுக்கி உம்முடைய
மணவாளிக்கு அன்பாய்
காண்பித்தானந்தம் உண்டாக
தேற்றர வளிப்பீராக.

8. நல்வழியில் ஓய்வில்லாமல்
போக எங்களை நீரே
கை கொடுத்துக் கூட்டிக்கொண்டு
ஆதரியும், இயேசுவே
கண்ணிக் கெச்சரிக்கையாக
உம்மைப் பற்றிப் போவோமாக

9. நேசத்தாலே ஏவப்பட்டு
உம்மைப் பின் தொடரவே
உமதாவியின் பலத்தைத்
தாரும், இயேசு கர்த்தரே.
எங்கள் மார்க்கஞ்செவ்வையாக
நீர் குணம் அளிப்பீராக.

10. அதினால் அடியார் உள்ளம்
நெஞ்சும் வாயும் நித்தமே
உமக்குத் துதி செலுத்தி,
உம்மைப் பாடும், இயேசுவே.
அப்போ தெங்களாலே எங்கும்
உம்முடைய பேர் விளங்கும்.