350. நான் பாவிதான், ஆனாலும் நீர்

1. நான் பாவிதான், ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்;
'வா' என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன்.

2. நான் பாவிதான், என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே;
என் கறை நீங்க, இயேசுவே,
என் மீட்பரே, வந்தேன்.

3. நான் பாவிதான், மா பயத்தால்
திகைத்து, பாவப்பாரத்தால்
அமிழ்ந்து மாண்டுபோவதால்,
என் மீட்பரே, வந்தேன்.
 
4. நான் பாவிதான், மெய்யாயினும்.
சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.

5.நான் பாவிதான், இரங்குவீர்,
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.

6. நான் பாவிதான், அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்;
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்.

Woodworth: LM
Charlotte Elliott † 1871.