1. ஆ, இயேசுவின் போர் வீரரே,
நாம் தாமதிப்பானேன்?
எல்லாரும் போர்க்களத்திலே
செல்வோம் வாருங்களளேன்!
இதோ நற்சிலுவை,
நற்சிலுவை!
சேர்வோம் இக்கொடியை,
இக்கொடியை
எக்காளச் சத்தம் கேட்கிறோம்,
போராடக் கடவோம்.
2. இங்கே கர்த்தாவின் பட்டயம்
என்றார்ப் பரிப்போமே,
மா தேவ மைந்தன் நம்மிடம்
துணையாய் நிற்பாரே.
வானோர் திரள் எல்லாம்,
திரள் எல்லாம்
நமக்கொத்தாசையாம்,
ஒத்தாசையாம்.
இப்பலவான் மெய்யாகவே
வெற்றி சிறப்பாரே.
3. போர் வீரனே, உன் சிலுவை
சுமந்து கொண்டு வா.
தீ அம்பு நெஞ்சின் கோட்டையைத்
தொடாப்படிக்குக் கா.
இதோ நற்சேவகன்,
நற்சேவகன்,
பின்னால் நில்லாதவன்,
நில்லாதவன்,
பிழைப்பின் சோலியில் சிக்கான்,
நன்றாய்ப் போராடுவான்.
4. சர்வாயுத வருக்கத்தைத்
தரித்துக் கொள்ளவும்!
மெய்வேதச் சொல் பகைஞரைப்
பொல்லாப் பிசாசையும்
வெட்டும் நற்பட்டயம்,
நற்பட்டயம்,
இதோ, உன் கேடயம்,
உன் கேடயம்.
மெய் விசுவாசம்; ரட்சிப்போ
உன் தலைச்சோடல்லோ.
5. நீ சிலுவையின் வீரனாய்
ஜெயிக்க ஆண்டவர்
தாவீதின் பெலனை அன்பாய்
அளிக்கக் கடவர்.
போரில் நிலைத்திரு,
நிலைத்திரு.
ஜெயம் நெருங்குது,
நெருங்குது,
கிரீடம் ஜெயித்தோனுக்கே
பின் வைக்கப்பட்டதே.
H.Annoni † 1770