355. பாதை காட்டும், மா யெகோவா

1. பாதை காட்டும், மா யெகோவா,
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன்,
இவ்வுலகம் காடுதான்;
வானாகாரம்
தந்து என்னைப் போஷியும்.

2. ஜீவதண்ணீர் ஊறும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன்;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்
வழியில் நடத்துமேன்;
வல்ல மீட்பர்!
என்னைத் தாங்கும், இயேசுவே.

3. சாவின் அந்தகாரம் வந்து
என்னை மூடும் நேரத்தில்
சாவின் மேலும் வெற்றி தந்து,
என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்
கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன்.

William Williams, † 1791