1. கிரீஸ்தோர்கள் சகோதர ஒருமையாக
இருந்து, அவர்கள் நடக்கையிலே
தெய்வீகச் சிநேகம் எல்லோரின் முன்பாக
வாங்கினால், மெத்தவும் இன்பமாமே;
அவர்கள் நற்சீர் அதினாலே தெரியும்,
அவர்களின்மேல் ஆசீர்வாதம் பொழியும்.
2. சகோதரரை நாம் சிநேகிப்போமாக,
அன்புள்ளவன் கர்த்தரைச் சிநேகிப்பான்;
பகைக்கிற மனிதன் மிகுதியாக
கர்த்தாவுக் காகாதோன், சாவவன் பலன்
தயாபரருக்கு நாம் ஏற்பதற்காக
எல்லோருக்கும் பட்சத்தைக் காண்பிப்போமாக.
3. பிதா நம்மை இத்தனை உட்கருத்தோடே
குமாரனுக்குள்ளே சினேகித்தாரே,
சினேகத்தால் இயேசு மா வேதனையோடே
எல்லோருக்குமாக மரித்ததுண்டே
முடிய நாம் போனோம், ஆனால் அவர்தாமே
அன்பாய் நம்மை மீட்டு ரட்சித்தவராமே.
4. வகைவரை நேசிக்க இயேசுவினாலே
நாம் போதிக்கப்பட்டால், சகோதரனை
நாம் வெகு அதிகமாய் உட்கருத்தாலே
சிநேகித்து, நம்முடைய ஆண்டவரைத்
தொழுகிற எந்தச் சகோதரனுக்கும்
மா தயவைக் காண்பிக்க நமக்கடுக்கும்.
5. நாம் ஏகமாய் மோட்சத்தின் நன்மைகளுக்கு
தயாபரரால் அழைப்பிக்கப் பட்டோம்,
நாம் ஏகமாய்க் கர்த்தரின் பட்டணத்துக்கு
நெருக்க வழியில் நடந்து போறோம்,
ஒரே மனப்பட்ட சன்மார்க்கத்தின் சட்டம்
காணாதே போனால், கிறிஸ்து மார்க்கம் அவத்தம்
6. தெய்வன்பினால் ஞான சகோதரரான
நாம் ஏக பிதாவுட வீட்டாராமே,
இரட்சகர் என்ற தலையின் கீழான
அனைவரும் ஏக சரீரிகளே
விரோதங்கள் வேண்டாம், சகோதரர்க்காக
நாம் சாகவும் மனது வருவதாக.
7. எல்லோரும் ஒரு மண்ணினாலே உண்டானோம்
கர்த்தாவுக்கு முன் சுய மேன்மை உண்டோ,
நாம் எதினால் கர்த்தரின் பிள்ளைகளானோம்,
இரட்சகர் புண்ணியத்தாலே அல்லோ,
அகந்தைக்கும் வாதுக்கும் ஏவுவதேது,
சிநேகமில்லா விசுவாசமும் ஏது.
8. ஆ, உமது மந்தையில் உத்தமமான
சிநேகம் உண்டாக்கும், பராபரனே.
ஆ, இயேசுவே, உம்மைச் சிநேகிப்பதான
சிநேகமும் அடைவதுமன்றியே.
அடியார் எல்லாரையும் உட்கருத்தாக
சிநேகிக்க எங்களை ஏவுவீராக.