361. என் பிதா என்னோடு என்றுந்

1. என் பிதா என்னோடு
என்றுந் தங்குவார்,
வெகு பட்சத்தோடு என்னை
நேசிக்கிறார், நேசிக்கிறார்.

2. இயேசு மீட்பராலே
பிள்ளையானேனே
ஞானஸ்நானத்தாலே
பாவம் நீங்கினதே,
பாவம் நீங்கினதே.

3. நேசப் பிள்ளையாக
என்னைச் சேர்த்தாரே
நல் தகப்பனாக,
என்னைக் கைவிடாரே,
என்னைக் கைவிடாரே.

4. என் பிழைகளாலே
தள்ளவே மாட்டார்;
சுதன் ரத்தத்தாலே
குற்றம் மன்னிக்கிறார்.
குற்றம் மன்னிக்கிறார்

5. மன நோவுண்டான
போதுங் கலங்கேன்
என் பிதா அன்பான
மார்பில் சார்ந்திருப்பேன்,  
மார்பில் சார்ந்திருப்பேன்.

6. நான் பிதாவின் சத்தம்
என்றுங் கேட்கவே,
அவருக்குள் நித்தம்
ஊன்றித் தங்குவேனே,
ஊன்றித் தங்குவேனே.

7. இக்கிருபை தானே
ஒப்பில்லாததே
அவர் வீட்டில் நானே
சேர்ந்து பூரிப்பேனே,
சேர்ந்து பூரிப்பேனே.

Swedish Hymnal.