360. கிறிஸ்தின் ஆட்டுக்குட்டி நான்

1. கிறிஸ்தின் ஆட்டுக்குட்டி நான்,
இது என் மகிழ்ச்சி தான்.
என் நல் மேய்ப்பரான கர்த்தர்
நன்றாய்ப் போஷிக்கச்சமர்த்தர்
என்னை அவர் நேசிப்பார்,
பேர் அறிந்தழைக்கிறார்.

2. அவரை நான் அண்டினேன்,
அவர் கோலால் பூரிப்பேன்.
எனக்கவர் ருசியான
மேய்ச்சலும் குளிர்ச்சியான
தண்ணீர் ஊற்றும் காட்டுவார்,
பசி தாகம் தீர்க்கிறார்.

3. அவர் என்னை இம்மையின்
அருள் நாட்களுக்குப்பின்
மோட்ச மேய்ச்சலுக்கழைத்து,
மடியிலே சேர்த்தணைத்து,
பேணுவார். மகிழேனோ?
நான் மா பாக்கியன் அல்லோ.

Lovise V. Hayn † 1783.