367. சொற்பக் காலம் பிரிந்தாலும் பார்

1. சொற்பக் காலம் பிரிந்தாலும் பார்
பின்பு ஏக சபையாக
கூடுவோம் ஆனந்தமாக;
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
கூடுவோம் கூடுவோம்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.

2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
மிக்க ஞானத்தால் நடத்தி
மோசமின்றியும் காப்பாற்றி,
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
கூடுவோம் கூடுவோம்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.

3. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
சிறகாலே மூடிக்காத்து
மன்னா தந்து போஷிப்பித்து,
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
கூடுவோம் கூடுவோம்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.

4. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
துன்பம் துக்கம் நேரிட்டாலே
கையில் ஏந்தி அன்பினாலே,
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
கூடுவோம் கூடுவோம்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
 
5. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
ஜெயக்கொடி பறந்தாடும்,
சாவும் தோற்றுப் பறந்தோடும்;
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
கூடுவோம் கூடுவோம்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.

J.E.Rankin † 1904