368. தோத்திரிப்போம்! ஆம், தோத்திரிப்போம்

1. தோத்திரிப்போம்!
ஆம், தோத்திரிப்போம்,
ஏன் கர்த்தர் நல்லோர்,
அவர் தயை என்றென்றும் உள்ளதே,
என்றென்றும் உள்ளதே,
என்றென்றும் உள்ளதே;:  

2. போற்றிடுவோம்!
ஆம், போற்றிடுவோம்!
அவர் அளித்த நன்மைகள்
ஒர்க்காலும் மறவோம்,
ஒர்க்காலும் மறவோம்;:

3. வல்லோர் அவர்,
ஆம், சர்வவல்லோர்,
மா ஞானமுள்ளோர்,
அவர் தயை தினம் புதியதாம்
தினம் புதியதாம்;:

4. மாட்சியுற்றோர்,
மெய் மாட்சியுற்றோர்,
மாதூயர் கர்த்தர்.
எச்சிஷ்டியும் அவரைப் போற்றுது,
அவரைப் போற்றுது;:

5. கும்பிடுவோம்!
ஆம், கும்பிடுவோம்!  
கர்த்தாவின் நாமம்,
மா பணிவாய்,
எக்காலுங் கூறுவோம்,
எக்காலுங் கூறுவோம்;:

6. பாடிடுவோம்!
ஆம், பாடிடுவோம்!
களித்துக் கூடி,
நாம் பாடும் பாட்டவருக்கேற்றதாம்,
அவருக்கேற்றதாம்;:

C.F.W.Henoses, † 1121.