369. வியாதியஸ்தர் மாலையில்

1. வியாதியஸ்தர் மாலையில்
அவஸ்தையோடு வந்தனர்;
தயாபரா, உம்மண்டையில்
சர்வாங்க சுகம் பெற்றனர்.

2. பற்பல துன்பம் உள்ளோறாய்
இப்போதும் பாதம் அண்டினோம்
ப்ரசன்னமாகித் தயவாய்
கண்ணோக்குவீரென்றறிவோம்

3. விசாரம் சஞ்சலத்தினால்
அநேகர் க்லேசப்பட்டனர்;
மெய்ப்பக்தி அன்பின் குறைவால்
அநேகர் சேர்வடைந்தனர்.

4. உலகம் வீண் என்றறிந்தும்
பற்றாசை பலர் கொண்டாரே;
உற்றாரால் பலர் நொந்தாலும்,
மெய்நேசர் உம்மைத்தேடாரே

5. மாசற்ற தூய தன்மையைப்
பூரணமாய்ப் பெறாமையால்,
எல்லோரும் சால துக்கத்தை
அடைந்தோம் பாவப் பாசத்தால்.

6. ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய்
மா துன்பம் நீரும் அடைந்தீர்;
எப்பாடும் பாவமும் அன்பாய்
ஆராய்ந்து பார்த்து அறிவீர்,

7. உம் வார்த்தை இன்றும் பலிக்கும்;
நீர் தொட்டால் சுகம் ஆவோமே,
ஆரோக்கியம் எல்லாருக்கும்
இம்மாலை தாரும், இயேசுவே.

Angelus:L.M.
Henly Twells, † 1900.