1. பரத்தை நாடிப்போக
நெஞ்சே விழித்திரு,
இனிப் பொய்யான லோக
வாழ்வை வெறுத்திரு;
சீயோனின் மேன்மையான
வாசஸ் தலங்கள் காண
விருப்பம் இல்லையோ?
பரத்தை நாடிப்போ.
2. கட்டுண்டாயோ, அத்தாலே
அஞ்சாதே ரட்சகர்
தம் மரணத்தினாலே
உன் க்லேசம் நீக்கினார்.
உன் கட்டவிழ்க்கக் கர்த்தர்
ஒருவரே சமர்த்தர்,
அவரை நம்பாயோ?
பரத்தை நாடிப்போ.
3. பிதா இரக்கமாக
எதிர்க்கொண்டோடுவார்.
உன்னை எப்போதுமாக
மேன்மைப் படுத்துவார்,
இரட்சகர் அளிக்கும்
மெய் நீதிக்கும் கதிக்கும்
நீ ஆசைப்படாயோ?
பரத்தை நாடிப்போ.
4. தேவாட்டுக் குட்டியான
பெரிய நேசரே,
சீயோனின் பாக்யமான
குடிகள் நடுவே
உம்மையே தோத்திரிக்க
இங்கின்னம் தாமதிக்க
மனம் இருக்குமோ?
பரத்தை நாடிப்போ.
5. ஆனால் என் வாஞ்சை யாவும்
தெய்வீகச் சித்தத்தில்
அடங்க நீர் உதவும்,
கர்த்தா, இவ்வுலகில்
உமதழைப்புக்காக
நான் காத்திருப்பேனாக.
உம்மை நான் நம்பினேன்,
நீர் என்னை ஆற்றுமேன்.