377. எருசலேம், எருசலேம்

1. எருசலேம், எருசலேம்
உயர்ந்த நகரே,
கர்த்தாவின் வாசஸ்தானமே,
பூலோக மோட்சமே,
நீ பாழடைந்தபடியால்
விசாரமாகிறோம்;
உன்னை நினைக்கும்போதெல்லாம்
கண்ணீர்  விடுகிறோம்.

2. முன்னால் உன் மக்கள்
கர்த்தரைச் சீயோனில் பாடினார்
இப்போ பயந்தொடுக்கமாய்ப்
புலம்பி நிற்கிறார்;
உன் மேன்மையாவும் போயிற்று,
உன் தாழ்வு யாவையும்,
கண்டெங்கள் கண் கலங்கிப்போய்,
கண்ணீரைச் சொரியும்.

3. எருசலேம், எருசலேம்,
மனந்திரும்பாயோ,
நீ கொன்ற ஆட்டுக்குட்டியை
அங்கிகரிக்காயோ,
நீ இயேசுவை
உன் மேசியாஎன்றண்டுமளவும்
எக்காலும் எங்கள் மனது
வியாகூலப்படும்.