379. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே

1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே
தம் வேலை முடித்தோர் நிமித்தமே,
கர்த்தாவே உம்மைத் துதி செய்குவோம்.
அல்லேலூயா! அல்லேலூயா!

2. நீர் அவர் கோட்டை, வன்கன் மலையாம்;
நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம்;
நீர் காரிருளில் பரஞ்சோதியாம்.
அல்லேலூயா! அல்லேலூயா!

3. முன் நாளில் பக்தர் நற்போராடியே
வென்றாற்போல் நாங்கள் வீரராகவே
பொன் க்ரீடம் பெற்றுக்கொள்வோமாகவே
அல்லேலூயா! அல்லேலூயா!

4. இங்கே போராடி நாங்கள் களைத்தும்,
உம் பக்தர் மேன்மையில் விளங்கினும்;
யாவரும் உம்மில் ஓர் சபை என்றும்,
அல்லேலூயா! அல்லேலூயா!

5. போர் நீண்டு மா கடூரமாகவே,
கெம்பீரக் கீதம் விண்ணில் கேட்குமே,
நாம் அதைக்கேட்டு தைரியம் கொள்வோமே.
அல்லேலூயா! அல்லேலூயா!

6. செவ்வானம் மேற்கில் தோன்றி ஒளிரும்;
மெய் வீரருக்கு ஓய்வு வாய்த்திடும்;
சீர் பரதீசில் பாக்யம் அமையும்.
அல்லேலூயா! அல்லேலூயா!

7. மேலான பகல் பின் விடியும், பார்!
வென்றோர் கெம்பீரமாய் எழும்புவார்;
மாண்புறும் ராஜா முன்னே செல்லுவார்.
அல்லேலூயா! அல்லேலூயா!

8. அந்தக் கூட்டம் நாற்றிசை நின்றும்
த்ரியேகருக்குத் துதி பாடியும்
விண் மாட்சி வாசலுள் ப்ரவேசிக்கும்.
அல்லேலூயா! அல்லேலூயா!

William W. How † 1897