378. கர்த்தர் சமீபமாம் என்றே

1. கர்த்தர் சமீபமாம் என்றே
யோர்தான் நதியின் அருகே
முன்தூதன் யோவான் கூறிடும்
நற்செய்தி கேட்க விழியும்.

2. விருந்து போன்ற நாதனார்
நம் நெஞ்சில் வந்து தங்குவார்;
அவர்க்கு வழி ஆகவும்
அகத்தை சுத்தம் பண்ணுவோம்.

3. நாதா, நீர் எங்கள் தஞ்சமும்,
ரட்சிப்பும் ஜீவக் கிரீடமும்;
உம் அருள் அற்ற யாவரும்
உலர்வார் புஷ்பம் போலவும்.

4. நோய்கொண்டோர் சொஸ்தமாகவும்
வீழ்ந்தோர் கால் ஊன்றி நிற்கவும்
பூலோகம் சீர் அடையவும்,
எழும்பி நீர் ப்ரகாசியும்.

5. உமக்குச் சாட்சி கூறியே
வழி ஆயத்தமாக்கவே
யோவான் ஸ்நானன்போல் நாங்களும்
உம் அருள் பெறச்செய்திடும்.

Winchester New:LM
Charles Coffin † 1749