160. ஓ ஸ்திரீ வித்தேசையா

எம்மைக் கண் பாராயோ?

பல்லவி 

ஓ! ஸ்திரீ வித்தேசையா,
அன்புகூராய்? துன்பம் தீராயோ?

அனுபல்லவி

வஸ்தோரே, கிறிஸ்துவேதா, மானுவேலே, யேசுநாதா,
வந்தெமை க்ருபைக் கண் பாராயோ? - ஓ!

சரணங்கள்

1. ஆதி மானிடர் புரிந்த பாதகம் தொலைக்க வந்த
அண்ணலே, உமக் கபயமே!
ஓ! ஸ்திரீ வித்தேசையா,
ஆதரித் திரங்க வேண்டுமே. - ஓ!

2. எத்தனை மனக் கிலேசம்? நித்தமும் சத்துருக்கள் மோசம்;
எந்தையே கைவிட்டுவிடாதேயும்,
ஓ! ஸ்திரீ வித்தேசையா,
எப்படியும் காத்தருள் மெய்யா. - ஓ!

3. ஆடுகள் சிதறிப்போச்சோ? அன்னியருக் கிஷ்டம் ஆச்சோ?
பாடுபட்ட பட்சக் கோனாரே,
ஓ! ஸ்திரீ வித்தேசையா,
காடுகளில் தேடிப் பாருமேன். - ஓ!

4. மந்தையை க்ருபை கண் பாரும்; சிந்தையில் துயரம் தீரும்,
சந்ததம் தொழுவம் சேருமேன்,
ஓ! ஸ்திரீ வித்தேசையா,
வந்தனம், உமக்குத் தோத்திரமே! - ஓ!


ராகம்: சயிந்தலி
தாளம்: சாபுதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்