180. குணம் இங்கித வடிவாய் உயர் கோவே

மணம் இங்கதிவளமாய் உற வருவீர்

பல்லவி

குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,
மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே.

சரணங்கள்

1. மன்றல்[1] செய்து மனை புது மண
வாளனோ டவ னேரும்[2]
தன் துணையான மங்கையும் இங்கே
தழைக்க அருள் தாரும். - குணம் 

2. ஆதி மானிடற் கான ஓர் துணை
அன்றமைத்த நற் போதனை,
தீதற இணையாம் இவர்க் கருள்
செய்குவீர், எங்கள் நாதனே. - குணம்

3. தொன்று கானாவின் மன்றல் ஓங்கிடத்
தோன்றிய தயாபரனே,
இன்று மன்றல் சிறந்திட அருள்
ஈந்திடும், க்ருபா கரனே. - குணம் 

4. பண்பதில் அவ லேசமும்[3] குறை
பாடில்லாத தெய்வீகனே,
நண்பதில் இரு பேரும் வாழ்ந்திட
நண்ணும், மா திரி யேகனே. - குணம்    

5. உற்ற நல் உற வோடும் எங்கள்
உரிமை ஆனவர் யாரும்
பற்றதாய் உறு பக்தியோடும்மைப்
பாட நல் மனம் தாரும். - குணம்


ராகம்: சூரியகாந்தம்
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: யோ. பால்மர்

[1] விவாகம்
[2] நியமிக்கும்
[3] மிகச் சிறிது